"அண்ணா விடுங்க.. அண்ணா விடுங்க Pls.." விபத்தை ஏற்படுத்திவிட்டு கெத்தாக பேசிய இளைஞரை சுளுக்கு எடுத்த ஊர் மக்கள்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி
அய்யனார் நகரைச் சேர்ந்த தண்டபானி என்பவர் வேடசந்தூர் ஆத்து மேடு மார்க்கெட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராமச்சந்திரன் என்ற இளைஞர் பழனியில் இருந்து காரில் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அதிவேகமாக சென்ற கார் முன்னால் சென்ற தண்டபானியின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தண்டபானி இரண்டு கார்களுக்கு இடையே விழுந்து சிக்கிக்கொண்டார். அங்கிருந்த பொதுமக்கள் தண்டபானியை மீட்டனர். அப்போது வானத்தை ஒட்டி வந்த ராமச்சந்திரனை பொதுமக்கள் தட்டிக்கேட்டபோது, காரில் இருந்த மற்றொரு இளைஞர் கெத்தாக காரைவிட்டு இறங்கி வந்து திமிராக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். அந்த இளைஞர் அடி தாங்க முடியாமல் கையெடுத்து கும்பிட்டு மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சிய பின்னர் பொதுமக்கள் அடிப்பதை நிறுத்தினர்.