மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, பாட்சா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட அப்பெண் ஏற்கனவே பக்கவாதத்தாலும் அவதியுறும் நிலையில், தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளது தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குற்றம்சாட்டப்பட்டுள்ள பாட்சா போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்