தினத்தந்தி இயக்குநரின் fellow citizen மற்றும் ஆற்றுப்படை அமைப்பு இணைந்து நடத்திய நீட் பயிற்சி முகாம்

Update: 2024-04-21 10:54 GMT

தினத்தந்தி இயக்குநரின் fellow citizen மற்றும் ஆற்றுப்படை அமைப்பு இணைந்து நடத்தும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் இலவச நீட் பயிற்சி முகாம் தாகூர் கல்லூரியில் நடைபெற்றது.

தினத்தந்தி இயக்குநர் ஆதவன் ஆதித்தன், இளைஞர்களின் திறமைகளை வெளியே கொண்டு வரும் வகையில் fellow citizen என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதில், ஆற்றுப்படை அறக்கட்டளை நிறுவனத்துடன் இணைந்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாவது ஆண்டாக தமிழகம் முழுவதிலும் இருந்து 120 அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆன்-லைன் மூலம் நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வண்டலூர் அருகே தாகூர் மருத்துவ கல்லூரியில், ஒருநாள் இலவச நீட் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஆற்றுப்படை அறக்கட்டளை குழுவினர், தாகூர் கல்லூரி துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் பங்கேற்ற அரசுப்பள்ளி மாணவர்கள், பயிற்சி பயனுள்ளதாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்