சேலம் மாவட்டம் எடப்பாடி எடுத்த காளிகவுண்டன்பாளையத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த பக்கத்து வீட்டு பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆட்டுவியாபரியின் மனைவியான சின்ன பொண்ணுக்கு
பக்கத்து வீட்டில் வசித்து வந்த காவேரி அடிக்கடி காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு சின்ன பொண்ணு உடன்படாத நிலையில், இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த காவேரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.