குளிப்பாட்டும் போது அஜாக்கிரதை.. குழந்தை துடிதுடித்து மரணம்.. தாய்மார்களே ஜாக்கிரதை | Cuddalore

Update: 2024-11-09 07:27 GMT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, குளிப்பதற்காக வைக்கப்பட்ட சுடு தண்ணீரை ஊற்றிக் கொண்டு தீக்காயமடைந்த குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது

பண்ருட்டி அடுத்துள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்த பிரபுதேவா என்பவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை யாழினி. கடந்த 5-ம் தேதி யாழினியை குளிக்க வைப்பதற்கு, அவரது தாயார் சுடுதண்ணீர் வைத்த நிலையில், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சோப் எடுக்க சென்றுள்ளார். அப்போது, சுடுதண்ணீர் என்று தெரியாமல் குழந்தை ஊற்றிக்கொண்டு சத்தம் போட்டு கதறி அழுதது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்