வெள்ளத்தில் மொத்தமாக மூழ்கிய கார் - உயிர் பிழைக்க மொட்டை மாடிக்கு சென்ற மக்கள்
வெள்ளத்தில் மொத்தமாக மூழ்கிய கார் - உயிர் பிழைக்க மொட்டை மாடிக்கு சென்ற மக்கள்
கடலூரில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தென் பெண்ணையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குண்டு குப்பளவாடி பகுதியில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும் வீட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் வெள்ள நீர் புகுந்து பழுது ஏற்பட்டுள்ளதாகவும், வாகனங்களை சரி செய்ய மெக்கானிக் தட்டுப்பாடு உள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.