இந்த போட்டியில் காவல்துறையினர் பொதுமக்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் எனவும், இதில் 32 அணிகள் பங்கு பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாக 50 ஆயிரம் ரொக்க பரிசும், இரண்டாம் பரிசாக 30 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய்
வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியானது ஐசிசி விதிகளின்படியே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்டம் முழுவதும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் அணி ஒரு அணியாகவும், ஊர்க்காவல் படையினர் எதிரணியாகவும் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கு பெறுவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திஷ், கிரிக்கெட் சீருடை அணிந்து, முதல் வீரராக களமிறங்கினார். போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.