சிதம்பரம் அருகே மேலமூங்கிலடி கிராமத்தில் 10
ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்கப்படாததால்,
மழைநீர் தெருவில் தேங்கி சாக்கடை போல் மாறி உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவல்,சேற்றுப்புண், இரவு நேரத்தில் விஷ ஜந்துக்கள் வீடுகளுக்கு படையெடுத்து வருவதாகவும், கொசு உற்பத்தி ஏற்பட்டு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர்.