திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் மாநில நெடுஞ்சாலையொரம் சென்னை மாநகராட்சி என எழுதப்பட்ட டிராக்டர் மூலம் கொண்டு வந்து குப்பை கொட்டியவர்களை பொதுமக்கள் சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கவரப்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் சத்யவேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் மேல் முதலம்பேடு ஏரி அருகே குப்பை கொட்ட வந்ததால் பொதுமக்கள் பாத்திரமடைந்தனர்.