"1 மணிக்கு வந்துருவாருனு சொன்னாங்க... ஆனா உயிர் போச்சுனுதான் செய்தி வந்துச்சு" - கதறிய மனைவி
"1 மணிக்கு வந்துருவாருனு சொன்னாங்க...
ஆனா உயிர் போச்சுனுதான் செய்தி வந்துச்சு"
கணவன் பலி செய்தி கேட்டு கதறிய மனைவி
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்த நிலையில், ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கெமின் இண்டஸ்ட்ரிஸ் என்ற தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் பகுதியில் மரம் வெட்டும் பணியில் 5 பேர் ஈடுபட்டபோது, மரம் சரிந்து விழுந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் தனியார் நிறுவனத்தில் சென்று முறையிட்டபோது, அங்கு யாரும் இல்லாததால், கற்களைக் கொண்டு அங்கிருந்த கண்காணிப்பு அலுவலகத்தை அடித்து உடைத்து உள்ளே சென்றனர்.