"எந்த கோயிலிலும் பார்க்காததை வடபழனி முருகன் கோயிலில் கண்ட மக்கள்"

Update: 2024-10-04 09:02 GMT

சென்னை வடபழனி முருகன் கோவிலில் கொலு கண்காட்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில் கொலு விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. நாள்தோறும் யாகசாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள் என அக்டோபர் 12ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெற உள்ளது. அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 6:00 மணி முதல் 6.30 மணிவரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. கொலு கண்காட்சியில், அயோத்தி ராமர்-சீதை, சிவன்-பார்வதி, ஆறுபடை முருகன், துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 300 முதல் 400 கொலு பொம்மைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நிலையில், முதல் நாளில் ஏராளமானோர் கொலுவை உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்