"எனக்கு 250 குழந்தைகள்..." - ஊர் மக்களின் செருப்பை துடைத்து பிள்ளைகளுக்காக பாடுபடும் அன்பு தந்தை

Update: 2024-11-10 07:30 GMT

வீட்டில் இருக்கும் ஓரிரு குழந்தைகளையே பார்த்துக் கொள்வதற்குள் நம்மில் பலருக்கும் மலைப்பாக இருக்கும். ஆனால், ஆதரவு ஏதுமில்லாமல் இருக்கும் 250-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்காக பேராசிரியர் ஒருவர் எடுக்கும் முயற்சி நம்மை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பார்க்கலாம்..விரிவாக..

ஆதரவற்ற ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக இவர், சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் பள்ளியை நடத்தி வருகிறார்.

பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவனால் கைவிட்ட பெண்களின் குழந்தைகள் உள்ளிட்டோருக்கும் இங்கு மதிய உணவுடன் முற்றிலும் இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது..

சென்னையில் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றினாலும், அதில் கிடைக்கும் வருமானத்தை இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளிக்கே செலவிட்டு வருகிறார்..

தனக்கு வீட்டில், 2 மகன்கள் இருப்பினும், இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் எனது ஆதரவு எப்போது உண்டு என ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார், பேராசிரியர் செல்வக்குமார்.

இப்படி, ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும் மற்றும் உணவுக்காகவும் இவரது முயற்சிகள் பாராட்டத்தக்கது. தற்போது 250 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் 80 மாணவர்களுக்கு மதிய உணவுடன், கல்வி வழங்கியும் வருகிறார், செல்வக்குமார்..

அந்தக் குழந்தைகளின் கல்வி, உணவு செலவுக்காக யாரிடமும் உதவி கேட்காத செல்வகுமார், வாரம் தோறும் பல்வேறு ஊர்களுக்கு சென்று பொது இடங்களில் அமர்ந்து, இப்படி பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்து வருகிறார்.

அந்த வகையில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் காலணியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். ஆதரவற்ற குழந்தைகளுக்காக பேராசிரியர் செல்வக்குமாரின் எடுத்திருக்கும் இந்த சீரிய முயற்சி அனைவராலும் வெகுவாக பாரட்டப்பட்டு வருகிறது.

இப்படியாக, 20 ஆண்டுகளாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக 11 பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டமும், 576 விருதுகளை வழங்கியும் கௌரவித்து உள்ளதாக பேராசிரியர் செல்வக்குமார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்