போலீசே செய்த படுகேவலம்..தமிழக காவல் துறையவே அதிரவிட்ட டீலிங்..கிண்டி கிழங்கெடுத்த சென்னை போலீஸ்
- சென்னை நகரில் கிரிண்டர் செயலி மூலமாகப் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த மத்திய பொதை பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த காவலர்கள் ஆனந்தன் மற்றும் சமீரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவரிடத்திலும் விசாரணை நடத்தியதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட காவலர் பரணி, ஜேம்ஸ் மற்றும் ஆனந்தன், சமீர் ஆகிய நான்கு பேரும் வேளச்சேரியில் உள்ள பிரபலமான கல்லூரியில் ஒன்றாகப் படித்தது தெரியவந்துள்ளது. மேலும் நான்கு பேரும் காவல்துறை சார்பில் நடத்தக்கூடிய கபடிப் போட்டிகளிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர். இதில் ஆனந்தன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறை வேலை வேண்டாம் என்று முடிவு செய்து விட்டு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் நைஜீரியா நாட்டிற்குச் சென்று வந்து இருக்கிறார். அதன் பின் ஆனந்தனுக்குப் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது.