சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போக்குவரத்துத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். வரும் 24ம் தேதி உடன் ஆம்னி பேருந்துகளை மாநகர பகுதிக்குள் இயக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் வரை, சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.