நாயை சுட்டு கொன்றது குறித்து போலீசார் விசாரணை

x

கும்பகோணம் அருகே வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் அருகே களம்பரம் கிராமத்தில் சுரேஷ்குமார் என்பவர் தனது வளர்ப்பு நாயை காணவில்லை என தேடி வந்தார். இந் நிலையில், அதே பகுதியில் ஒருவரது வீட்டின் பின்புறம் நாய் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்து. இதையடுத்து அங்கு சென்று பார்த்ததில் பால்ரஸ் குண்டு பாய்ந்து நாய் இறந்து கிடந்துள்ளது. இது தொடர்பாக சோழபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார் அருண்குமார் என்பவரிடம் ஏர்கன் துப்பாக்கியை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்