Savukku Shankar Pressmeet | "நெருக்கடிக்கு ஆளாவீர்கள்..." - சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி

Update: 2025-03-27 12:43 GMT

தன் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள, தனது வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை மீது நம்பிக்கை இல்லையென பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத நிலையில் சிபிஐ விசாரணை வேண்டி நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்