சென்னையில் இளம்பெண் கடத்தல் - பெண்ணை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் பரபரப்பு பேட்டி | Chennai | Kidnap
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வடமாநில இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் நிலையில், மீட்கப்பட்ட இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பெண்ணை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் மோகன், பெண் கடத்தப்பட்டது தெரியாது என்று தெரிவித்துள்ளார். தனது ஆட்டோவில் ஒருவர் அந்த பெண்ணை ஏற்றி விட்டதாகவும், பயணம் செய்தபோது அழுததால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.