ரீ என்ட்ரி கொடுக்கும் பிரமாண்டம்...தமிழகத்துக்கு எதிர்பாரா சர்ப்ரைஸ்-உலகின் டாப் நிறுவனம் சென்னையில்

Update: 2024-09-14 05:35 GMT

தமிழக அரசின் ஓராண்டுகால தொடர் முயற்சியால் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தமிழ்நாட்டுக்கு மீண்டும் திரும்பி வரும் நிலையில் உற்பத்தியைத் துவங்க சம்மதித்தது எப்படி?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

செங்கல்பட்டு மாவட்டம்...மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலை வளாகத்தை மீண்டும் ஏதோ ஒரு வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அரசின் முயற்சி கடந்த ஆண்டு ஜூன் முதலே தீவிரமடைந்தது...

கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு பயணம் செய்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "ஃபோர்டு யுஎஸ்ஏ" நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையைத் துவங்கினார்...

நிலைமையை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு 6 மாத காலம் அவகாசம் கேட்டது ஃபோர்டு நிறுவனம்...

தொழிற்சாலையை பயன்பாட்டுக்குக் கொண்டுவர என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்பதை தமிழக அரசின் தொழில்துறையும், ஃபோர்டு நிறுவனமும்

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தின...

ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை...

ஃபோர்டு நிறுவனமே அந்த இடத்தில் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்...

2024 தொடக்கத்தில், இந்த யோசனையை நோக்கி ஃபோர்டு நிறுவனம் நகரத் தொடங்கியதாகத் தகவல்கள் வெளியாகின...

கடந்த ஜூலை மாதம், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் டெட்ராய்ட் அருகில் உள்ள டியர்பார்ன் என்ற இடத்தில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் முதன்மை தொழிற்சாலைக்கு நேரடியாகச் சென்றார் அமைச்சர் ராஜா...

ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளைச் சந்தித்து தமிழ்நாட்டில் ஆட்டோமேட்டிவ் துறையில் குறிப்பாக மின் வாகனத்துறையில் ஏற்பட்டு வரும் விரைவான வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார்...

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மின்வாகனத் தொழிற்சூழல் குறித்தும் மின்வாகனங்களுக்கு அதிகரித்துவரும் தேவை குறித்தும், இந்தியாவை விட்டு ஃபோர்டு வெளியேறிய 2021க்குப் பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சி குறித்தும் அவர் விரிவாக விளக்கினார்...

அந்நிறுவனத்தின் மறைமலைநகர் தொழிற்சாலை வளாகத்தின் மதிப்பு குறித்தும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்...

இறுதியாக, ஃபோர்டு நிறுவனம் திரும்பி வருவதற்கு தமிழ்நாடு அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும் என்றும்...

தமிழ்நாட்டின் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் நுழைவதற்கான ஒத்துழைப்பை நல்குவதாகவும் தற்போதைய அமெரிக்க பயணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் தானே நேரடியாக வாக்குறுதி அளித்தது ஒப்பந்தம் நிறைவடைய வழிவகுத்தது...

Tags:    

மேலும் செய்திகள்