சென்னை போலீசுக்கு எதிர்பார ஷாக் கொடுத்த நிழலுலக `லேடி ரோலக்ஸ்’- க்ரைம் நெட்வொர்க்...மாஃபியா கேங்க்..

Update: 2024-11-08 09:26 GMT

சென்னை போலீசுக்கு எதிர்பார ஷாக் கொடுத்த நிழலுலக `லேடி ரோலக்ஸ்’- க்ரைம் நெட்வொர்க்...மாஃபியா கேங்க்.. பப்புகள் மூலம் இளசுகளுக்கு டார்கெட் - கட்டம் கட்டி இறங்கிய அருண் IPS

சென்னையில், பப்புகள் மூலம் இளைஞர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்த லேடி ரோலக்ஸை போலீசார் கைது செய்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

DRUG மாஃபியாக்களின் வலையை உடைக்க, போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைக்கென ஒரு தனிப்பிரிவை உருவாக்கி இருக்கிறார் சென்னை கமிஷனர் அருண்...

போதைப் பொருள் ஒழிப்பு நுண்ணறிவு பிரிவு என செயல்பட்டு வந்த இந்த ஏ.என்.ஐ போலீசார், போதைப்பொருள் கடத்தும் கும்பலையும், விற்கும் கும்பலையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்...

இதில், சென்னை உயர் நீதிமன்றம் அருகேயுள்ள பிரகாசம் சாலையில்.. இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேரை போலீசார் சுற்றி வளைத்ததும், அதில் இருவர் தப்பியோடியதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

பிடிபட்ட நான்கு பேரையும் சோதனை செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த நிலையில், நால்வரையும் காவல்நிலையம் அழைத்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சி காத்திருந்தது..

கைதான நால்வரில் இருவர் 23 வயதை கூட நிரம்பாதவர்கள், மேலும் இருவர் 18 வயது கூட நிரம்பாத சிறுவர்கள்...

இந்நிலையில், அவர்களிடம் மெத்தப்பெட்டமைன் போதை மாத்திரை எப்படி வந்தது என போலீசார் முடுக்கி விட்ட விசாரணையில், சென்னை மணலியை சேர்ந்த லேடி ரோலக்ஸான சகிமா மெளசியா சிக்கி இருக்கிறார்...

விக்ரம் பட பாணியில், இளைஞர்களையும், சிறுவர்களையும் தனக்கு கீழ் வைத்துக் கொண்டு, பப்புகள் மற்றும் மதுபான விடுதிகள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு இவர் போதைப்பொருள்களை விற்று வந்தது தெரியவந்தது..

உடனடியாக, மெளசியாவை கைது செய்து, அவரின் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்திய போலீசார், 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகளை கைப்பற்றி இருக்கின்றனர்...

தொடர்ந்து, மௌசியாவின் பின்னணியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பல் யார்? இன்னும் போதைப் பொருள் விற்பனையில் எத்தனை இளைஞர்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளனர் என கும்பலின் நெட்வொர்க்கை பிடிக்க முனைப்பு காட்டி வரும் போலீசார், தப்பிச்சென்ற இரண்டு பேரையும் தேடி வேட்டையில் இறங்கியிருக்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்