சென்னையில் பிரபல மருத்துவமனையில் போதை இளைஞர்கள் அட்ராசிட்டி.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
மதுபோதையில் மருத்துவமனைக்குள் நுழைந்த மூவர், தங்களுள் காலில் அடிபட்டு இருந்தவருக்கு சிகிச்சையளிக்க சொல்லி தகராறு செய்திருக்கின்றனர். இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததால், சிகிச்சையளிக்க முடியாது என மருத்துவர்கள் கூறவே தகராறு முற்றி இருக்கிறது. இதில், தலைமை மருத்துவரை தகாத வார்த்தைகளால் திட்டிய இளைஞர்கள், ஒரு கட்டத்தில் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க முயன்ற மருத்துவரை கடத்திச் செல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே, அக்கம்பக்கத்தினர் தடுத்து நிறுத்தி மருத்துவரை காப்பாற்றிய நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதனிடையே சம்பவம் குறித்தான மருத்துவமனை சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரவியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலைமறைவாக உள்ள மூவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.