சென்னையை அதிரவைத்த நடத்துநர் மரணம்.. எழும்ப முடியாமல் மயங்கிய மகள் - உறவினர்கள் சொன்ன பகீர் தகவல்
சென்னையில் பயணி ஒருவர் தாக்கியதில் அரசுப் பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழந்த நிலையில், அவரை 4 அல்லது 5 பேர் சேர்ந்து அடித்துக் கொன்றுள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜெகன்குமார் இறந்ததால், அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக உறவினர்கள் மற்றும் சக ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.