விழுப்புரம் அருகே ஊராட்சி எல்லையை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் திருக்கை ஊராட்சியிலிருந்து, டட் நகர் தனி ஊராட்சியாக பிரிக்கப்பட்ட நிலையில், இரு ஊராட்சிகளின் எல்லை பகுதிகளை பிரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், அரியலூர் திருக்கை கிராம மக்களின் 700 ஏக்கர் நிலத்தை ட்ட நகர் ஊராட்சியுடன் இணைக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து மனு கொடுக்க வந்த கிராம மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். எல்லை பிரிப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்தில் கூட்டம் நடத்தபடுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.