ஜெயலலிதாவின் முகமூடி அணிந்து ஆடு, மாடுகளுடன் வந்து மரியாதை செய்த அதிமுக தொண்டர்கள்
ஜெயலலிதாவின் முகமூடி அணிந்து ஆடு, மாடுகளுடன் வந்து மரியாதை செய்த அதிமுக தொண்டர்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். ஜெயலலிதாவின் முகமூடியை அணிந்தபடி சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள், மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி, விவசாயிகளுக்கான ஆடு மாடு கன்று, பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போன்றவைகளை கொண்டு வந்தனர். அதிமுக காலத்தில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதை ஜெயலலிதாவின் நினைவுநாளில் நினைவு கூறுவதாகவும் அதிமுக தொண்டர்கள் தெரிவித்தனர்.