கூட்டத்தில் காலியாக கிடந்த சேர்கள்.. பார்த்ததும் அதிர்ந்த மத்திய அமைச்சர்கள்
கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் கிராமத்தில், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்தில் மீனவர்கள் யாரும் பங்கேற்காமல் நாற்காலிகள் காலியாக கிடந்தது. தூத்தூர் மீனவ கிராமத்திற்கு சென்ற மத்திய அமைச்சர்கள் புரஷோத் ருபாலா, எல்.முருகன் ஆகியோர் மீனவர்களின் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது நாற்காலிகள் காலியாக இருந்ததால், கட்சி நிர்வாகிகள் மற்றும் மீனவ மக்களை மேடையின் கீழ் பகுதியில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமருமாறு கூறினார். பின், குறைந்த அளவிலான ஆட்களே இருந்ததால் மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை பொதுமக்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு மாற்றி பின்னர், மீனவ மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.