பெண் மருத்துவர் ஜிம்மில் இருக்கும்போது கேமரா வைத்த கயவன்.. பதறிப்போன பெண்..

Update: 2025-04-13 08:47 GMT

மதுரையில் பெண் மருத்துவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது, திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள பீனிக்ஸ் ஜிம்மில் பெண் மருத்துவர் ஒருவர் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, அதே ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த சிலம்பரசன் என்பவர் பெண் மருத்துவரை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்துள்ளார். இதனை கவனித்த அவர் சிலம்பரசனை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது பெண் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலம்பரசன் அவரை ஆபாசமாக பேசியுள்ளார். இதனையடுத்து ஜிம் மேற்பார்வையாளர் இச்சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்த நிலையில், சிலம்பரசன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெண் மருத்துவர் ஜிம்மில் இருக்கும்போது கேமராவை வைத்த கயவன்.. பார்த்ததும் அதிர்ந்த சம்பவம்..

Tags:    

மேலும் செய்திகள்