``தமிழக முஸ்லிம்கள் விஜய்யிடம் விலகி இருங்கள்’’ - இஸ்லாமிய மதகுரு அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென, இஸ்லாமிய மதகுரு மௌலானா ஷாபுதீன் ரஸ்வி அறிவுறுத்தியுள்ளார். ஃபத்வா எனப்படும் இஸ்லாமிய சட்ட விதியை வெளியிட்டுள்ள அவர், சமூக விரோத சக்திகளை இப்தார் விருந்துக்கு அழைப்பது அனுமதிக்க முடியாதது என்று இஸ்லாமிய சட்ட விதிகள் கூறுவதாக மதகுரு ஷாபுதீன் ரஸ்வி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் விஜய்யிடமிருந்து விலகி இருக்கவும், அவரது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்கவும், அவரை தங்கள் மத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம் என்றும் மத குரு மௌலானா ஷாபுதீன் ரஸ்வி அறிவுறுத்தியுள்ளார்.