வாடிவாசலில் சீறப்போகும் காளைகள்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Update: 2023-12-30 10:13 GMT

வரும் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் நடத்த அனுமதி வழங்கி அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது...தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு முன்னேற்பாடுகள் புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் சூடு பிடித்துள்ளன... ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 1ம் தேதி அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம்... ஆனால் ஒரு சில காரணங்களால் ஜல்லிக்கட்டு நடத்துவது தாமதமானது... இந்த நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தும் பொருட்டு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன... வாடிவாசல், பேரிகார்டு அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன... வரும் 6ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த விழா குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்... மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது... இந்நிலையில், வரும் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் நடத்த அனுமதி வழங்கி அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்