தமிழகத்தில் கண்டறியப்பட்ட வினோத பறவைகள்...ரசித்து பார்த்த மாணவர்கள்

Update: 2024-01-28 11:08 GMT

முத்துப்பேட்டையில், வனத்துறை சார்பில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. திருவாரூர் மாவட்டம் அலையாத்திக் காடு, லகூன், மறவகாடு, கரிசக்காடு உள்ளிட்ட 10 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணிகளில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை பூநாகை, அரிவாள் மூக்கன், மண்டை உள்ளான், நத்தை கொத்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்