அவிநாசி அருகே இரு மூதாட்டிகளை ஏமாற்றி 12 சவரன் தங்கச்செயினை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். வடுகபாளையத்தை சேர்ந்த வள்ளியம்மாள், பூவாத்தாள் ஆகியோர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த சிவச்சந்திரன், கலச பூஜையில் நகைகளை வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என அவர்களிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய மூதாட்டிகள், 12 சவரன் நகைகளை கொடுத்த நிலையில், சிவச்சந்திரன் நகைகளுடன் தலைமறைவானார். தொடர்ந்து புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.