ஐதராபாத்தில், சொத்தில் பங்கு கேட்டு மாமாவை ஹெல்மெட்டால் தாக்கிய போக்குவரத்து காவலரின் வீடியோ வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள லாங்கர்ஹவுஸ் போக்குவரத்து காவலர் ஷாஹித் கான் என்பவருக்கும், அவருடைய மாமா அப்துல் வாஹித் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சொத்தில் பங்கு கேட்டு ஷாகித் கான் ஹெல்மெட்டால் மாமாவை தாக்கி உள்ளார். இந்த காட்சிகள் வெளியாகி உள்ளநிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.