தமிழகம் முழுதும் வெடிக்கும் போராட்டம் "நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்"- பெண்கள் முழக்கம்

Update: 2024-12-30 12:33 GMT

“We are safe in Tamilnadu” என்ற பதாகைகளை ஏந்தி, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவிகள் முழக்கம் எழுப்பினர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து, அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், We are safe in Tamilnadu” என்ற பதாகைகளை ஏந்தி, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் முழக்கமிட்டனர். இதுதொடர்பான வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்