அங்கன்வாடி மையத்தில் அசிங்கம் செய்த மர்ம நபர்கள்.. அதிர்ச்சியில் ஊர் மக்கள்

Update: 2025-02-26 02:55 GMT

நெல்லை மாவட்டம் குன்னத்தூர் அங்கன்வாடி மையத்தின் வாசலில், மர்ம நபர்கள் மலம் கழித்து சுவற்றில் பூசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகாரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்பவும், பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், சிலர் மதுபாட்டில்களை உடைத்து விட்டு செல்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்