"10 ஆண்டுகளுக்கு பிறகு.." - ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்

Update: 2023-08-16 03:27 GMT

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் அம்மாவாசை நாட்களில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னூர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்தால் மோட்சம் கிட்டும் என்ற ஐதீகம் உள்ளது.

இந்த நிலையில் அம்மாவாசை நாட்களில் சிறந்த அமாவாசையாக ஆடி, தை, மாகாளயா அமாவாசைகள் பார்க்கப்படுகிறது.

இந்த நாட்களில் தம்மோடும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் மோட்சம் கிடைக்கும் என்ற ஐதீகம் தொடர்ந்து வருகிறது.

மேலும் இந்த ஆடி மாதத்தில் மட்டும் இரண்டு அமாவாசைகள் வந்துள்ளதால் இது சிறப்பு வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி அதிகாலை முதலே அக்னித் தீர்த்த கடற்கரையில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்து புனித நீராடி வருகின்றனர்.

மேலும் கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி கோயிலுக்குள் சென்று ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்மாளை நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர்.

மேலும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு குற்றச்செயல்களை கண்காணிக்கும் விதமாக ஆங்காங்கே சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டும், சிவில் உடையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குற்றச்செயல்களை கண்காணித்து வருகின்றனர்.

இதனால் ராமேஸ்வரம் நகர பகுதியே மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றது

Tags:    

மேலும் செய்திகள்