அதிகாரிகள் செய்த செயல்...மின்கம்பத்தில் ஏறி அமர்ந்த விவசாயி - பொள்ளாச்சி அருகே அதிர்ச்சி
பொள்ளாச்சி அருகே விவசாய கிணற்றின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த விவசாயி, மின் கம்பம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். பி.ஏ.பி. வாய்க்காலில் 50 மீட்டருக்குள்ளாக இருக்கும் கிணறுகள், போர்வெல் உள்ளிட்டவற்றின் மின் இணைப்புகளை துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், கோவை மாவட்டம் சி. மலையாண்டிபட்டணம் பகுதியில் உள்ள முத்துசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். இதனால், ஆத்திரமடைந்த முத்துசாமியின் மகன் மனோஜ், மின் கம்பம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.