ஆவின் பாலில் புழு இருந்ததா? - ஆய்வில் அம்பலமான தவறான குற்றச்சாட்டு

Update: 2024-03-19 05:58 GMT

உதகையில், ஆவின் பால்பாக்கெட்டில் புழு இருந்ததாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு, ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தேநீர் கடை ஒன்றில், ஆவின் பாலை பாத்திரத்தில் ஊற்றும் போது புழுக்கள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், குற்றசாட்டில் உண்மை இல்லை என விளக்கம் அளித்தார். மேலும், ஆவின் பால் பாக்கெட்டில் புழு இருப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்