ஆசிட் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய அரசு பேருந்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில், லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து புதுச்சேரிக்கு ஆசிட் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி மீது, சென்னையில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பேருந்து மோதியது. இதில், லாரியில் இருந்த டேங்கின் வால்வு உடைந்து சல்பயூரிக் ஆசிட் சாலையில் கொட்டியதும், பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்துக்குள் இருந்த 41 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.