IPL 2025 CSK Vs RCB || CSK, RCB ரசிகர்களே ரெடியா - வந்தது முக்கிய தகவல்
சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ல் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் நாளை காலை 10.15 மணிக்கு தொடங்கும் என சி.எஸ்.கே. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 1,700 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.