கூட்டமாக வெளியேறும் வீரர்கள்.. வலுவிழக்கும் இலங்கை ராணுவம்.. வெளியேறிய பின் நிகழ்த்தும் பயங்கரம்
கூட்டமாக வெளியேறும் வீரர்கள்.. வலுவிழக்கும் இலங்கை ராணுவம்.. வெளியேறிய பின் நிகழ்த்தும் பயங்கரம்.. ஏன்?
இலங்கையில், கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரை 8 ஆயிரம் படை வீரர்கள் சேவையை விட்டு வெளியேறி உள்ளனர். இவர்களில் 197 பேர் அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 9 அதிகாரிகள் மற்றும் 442 வீரர்கள் வெளியேறியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும், பொருளாதார பிரச்சினைகள் மற்றும் நிர்வாக பிரச்சினைகள் காரணமாக ராணுவத்தை விட்டு விலகியுள்ளது தெரிய வந்துள்ளது. யுத்த காலத்தில் முப்படை வீரர்கள் வெளியேறிய நிலையில், தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக வெளியேறி வருகின்றனர். படையில் இருந்து வெளியேறுவோர், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.