செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், காலை முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 4 ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ஏரியின் நிலவரம் குறித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியின் நிலவரம், நீர் இருப்பு, வெளியேற்றப்படும் நீரின் விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், அனைத்து இடங்களிலும் நீர் வெளியே செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.