கலைஞர் கனவு இல்லத்தின்கீழ், 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்றும், சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும் என்றும், தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
கலைஞர் கனவு இல்லத்தின்கீழ், 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் - சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாக புதிதாக, 600 கோடி ரூபாயில்
25 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் -
88 கோடி ரூபாயில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும் - 2 ஆயிரத்து 423 கோடி ரூபாயில், சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் செயல்படுத்தப்படும் என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். வேளச்சேரியில் புதிய பாலத்திற்கு 310 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 7 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் எனவும் கூறினார். சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.