திருத்தணி கோவிலுக்கு யானைகள் எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சட்டப்பேரவையில் கேள்வி, பதில் நேரத்தின் போது திருத்தணி கோவிலுக்கு யானை வழங்குவது குறித்து எம்.எல்.ஏ சந்திரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், யானைகளை கோவில்களுக்கு நேரடியாக கொள்முதல் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவித்த அவர், யானைகள் தெய்வத்திற்கு நிகரானது என்பதால், கோவில்களில் பயன்படுத்த அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றம் அனுமதியளித்த பின்னர் திருத்தணி கோவிலுக்கு யானைகள் வழங்கப்படும் என அவர் கூறினார்.