"ஊருக்கு 30 பேர்.. மாநிலத்திற்கு லட்சம் பேர்.." - மேடையில் கொந்தளித்த திருமா | Thirumavalavan

Update: 2024-10-03 02:56 GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இதில், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் எம்.பி. சுதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டின் தொடக்கத்தில் மது ஒழிப்பு மாநாட்டிற்கான தீர்மானங்களை திருமாவளவன் வாசித்தார். தேசிய மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தி மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்; மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்; போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்களை அவர் முன்மொழிந்தார். மேலும், மதுவால் தேசிய அளவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, தமிழக அளவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்