விசிகவுக்கு அங்கீகாரம்.. பானையை வைத்து ஆரவாரம் செய்த மக்கள் - உற்சாக வரவேற்பு
வேப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மாநிலக்கட்சிக்கான அங்கீகாரமும், பானை சின்னம் வழங்கியதை கொண்டாடும் வகையில், அக்கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்ற அக்கட்சித்தலைவர் திருமாவளவனுக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கூட் ரோட்டில் அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.