தமிழக அரசு பட்ஜெட்டில் - புகழ்பெற்ற நூலகங்களிலும் தமிழ் புத்தகங்கள்

Update: 2024-02-19 16:27 GMT
  • தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
  • தமிழின் மிகச்சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களிலும், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் -
  • தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிடச் செய்ய 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் -
  • அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 600 முக்கிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.
  • தொழில்நுட்ப பரப்பில் தமிழ்மொழி செழித்து வளரத் தேவையான இயந்திரவழிக் கற்றல் செயற்கை நுண்ணறிவு,
  • இயற்கைமொழிச் செயலாக்கம் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க, புத்தொழில் நிறுவனங்களுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடெங்கும் உள்ள அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மின்பதிப்பாக மாற்றும் முயற்சிக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  • 2024-25ம் ஆண்டில், சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்கள் மற்றும் பிற மாநிலங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் -
  • இதற்காக தொல்லியல் துறைக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
  • கீழடி அகழாய்வுத் தளத்தில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் 17 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்
  • தொல்மரபணுவியல் ஆய்வகம் மூலம் தொல் மரபியல் ஆய்வினை மேற்கொள்ள 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சிந்துவெளி பண்பாட்டு நூற்றாண்டு கருத்தரங்கம் இந்த ஆண்டு சென்னையில் நடத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்