பைக்கை ஓட்டி விபத்து ஏற்படுத்திய 17வயது சிறுமி தந்தை மீது பாய்ந்த வழக்கு
சங்கரன்கோவில் அருகே 15வயது சிறுமி இருசக்கர வாகன ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சிவகிரியில் சாலையோரம் நடந்து சென்ற இருவர் மீது அவ்வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுமி மோதியுள்ளார்.இதில் 9 வயது சிறுமி காயமடைந்த நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்று மாவட்ட எஸ் பி அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.