"மீண்டும் அமைச்சரானதால் சாட்சிகளுக்கு நெருக்கடி"- அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Update: 2024-12-02 06:45 GMT

ஜாமின் தீர்ப்பை திரும்ப பெறக் கோரும் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மீண்டும் அமைச்சரானது தொடர்பாக டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறையில் வேலை வாங்தித் தருவான மோசடியில் வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த வித்யா குமார் தாக்கல் செய்த மனுவில்,

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதும், அவரை மீண்டும் தமிழ்நாடு முதல்வர் அமைச்சரவையில் சேர்த்திருப்பதும், காவல்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வருடன் செந்தில் பாலாஜிக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பும் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்தித் தருவான மோசடி வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறாது என்பதை காட்டுகிறது.

செந்தில் பாலாஜி வழக்கை மாநில புலனாய்வு அமைப்பு விசாரித்து வருவதால் தீர்ப்புகள் பொருந்தாது. அரசு இயந்திரத்தின் மீது, காவல்துறையிலுமம் செல்வாக்கு படைத்து மூத்த அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியால் மனுதாரர் வித்யா குமார் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெற்று, அவரது ஜாமீன் மேல்முறையீடு மனுவை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் வித்யா குமார் சார்பில் மூத்த வழக்குரைஞர் குரு கிருஷ்ண குமார் ஆஜரானார்.

செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா ஆஜரானார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராகயிருப்பதால் சாட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது இயற்கையே, ஜாமீன் அளித்த மறுநாளே அமைச்சராக இருப்பது சாட்சியங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டதுடன், டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்