பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க கோரி எம்பிகள் வழங்கும் பரிந்துரைக்கான வரம்பை ஆண்டுக்கு 150 ஆக உயர்த்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கோரிக்கை கோரியுள்ளார். மக்களவையில் பூஜ்ய நேரத்தின் போது உரையாற்றிய விஜய் வசந்த், இந்த திட்டத்தின் கீழ் எம்பிக்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் பரிந்துரைக்கான எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார். மேலும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியமான மருத்துவ செலவுகளையும் முழுமையாக ஏற்கும் வகையில், கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்...