திமுக கவுன்சிலரை தாக்கிய அதிமுகவினர் - நாமக்கல்லில் பரபரப்பு

Update: 2025-03-25 08:43 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையம் திமுக நகர்மன்ற உறுப்பினராக ரமேஷ் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, செந்தில் ஆகிய இருவரும் சேர்ந்து ரமேஷ் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல் நடத்திய இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து ரமேஷ் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்