DMK | BJP | தி.மு.க Vs பா.ஜ.க நேருக்கு நேர் காரசார விவாதம்... பரபரப்பில் பேரவை
தமிழக சட்டப்பேரவையில், வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி மற்றும் பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன் இடையே காரசார விவாதம் நடந்தது. வக்பு வாரிய சொத்துக்களில் பல்வேறு மாநிலங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். முழுமையாக சட்டத்தின் வரம்பிற்கு உட்பட்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் தான் வக்பு வாரிய சட்ட திருத்தம் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, இஸ்லாமிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால், 115 திருத்தங்கள் மூலம் அந்த சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் அளவுக்கு வக்பு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.