``கர்நாடக பாஜகவின் புதிய ஊழல் அம்பலம்'' - சித்தராமைய்யா போட்ட கிடுக்குப்பிடியில் மோடி
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளை மூடி மறைக்க தனக்கு ரூ.150 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் என முன்னாள் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அன்வர் மணிப்பாடி கூறியுள்ளார். அப்போது விஜயேந்திராவை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டு பிரதமர் மோடியிடம் சம்பவத்தை கூறியதாகவும் அன்வர் மணிப்பாடி கூறியிருக்கிறார். நான் ஊழல் செய்ய மாட்டேன், செய்யவும் விடமாட்டேன் என கூறிய பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் மவுனமாக இருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக சித்தராமையா விமர்சித்துள்ளார். பாஜக ஊழல்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.